Wednesday, 12 October 2011


ஏதோ ஒரு ஒற்றைச் சொல்லில்
உனை மீறி வெளிப்படும் அன்பு..

எப்போதாவது கிடைப்பது தானே
அமிர்தம்?

Friday, 23 September 2011


அன்னையின் அரவணைப்பும்
அருகாமைச் சுகமும் வேண்டி
அழும் குழந்தையென
உந்தன் பின்னால் மனம்..

Wednesday, 3 August 2011

கண்கள்

உதடுகள் மறைக்கும்
உண்மைகளை
போட்டுடைக்கும் 
கள்ளமில்லா குழந்தை.. 

Sunday, 10 July 2011

வார்த்தைகள் விற்றுக்

கொஞ்சம்

மௌனத்தை வாங்கச் சென்றேன்..

வார்த்தைகள் கொள்வாரில்லை,

மௌனமும் தருவாரில்லை..

கோவத்தில் கொட்டுவதற்கும்,

நேசத்தில் அள்ளுவதற்கும்,

தேவையென நினைத்த வார்த்தை,

எல்லோரிடமும் நிரம்பி 

வீணென வழிந்து..


வாயடைத்துப்போனேன்..

மௌனம் தானாய் வசப்பட்டது!

Friday, 1 July 2011



உன்னை அழகென்றால்


மறுக்கிறாயே...

மானை மான் என்றும்

மீனை மீனென்றும் தானே

சொல்லமுடியும்!

Tuesday, 28 June 2011

அழகு





அழகாய் இருப்பதாகச் சொல்ல


அழகு இருக்க வேண்டாம்..


அன்பு மட்டும் போதும்..



Thursday, 16 June 2011




உன்னிடமிருப்பது

தொற்றுவியாதி தான்..

அருகில் நீ வந்ததும்

என் முகத்திலும் தொற்றிக்கொண்டது...

உன் புன்னகை!

காண வருகையில்

தூரம் தெரிவதில்லை..

திரும்புகையில்,

நீண்ட சாலைகளும்,

அதைவிட நீண்ட சாரியில்

வாகனங்களுமாய்..

பொழுதும் நீள்கிறது!

எழுதுவதெல்லாம்

  உனக்கென்றானபின்,

எழுத்தைவிட இனியது எது?!

Tuesday, 14 June 2011


ஆசை ஆசையாய்

தினம் சமைத்திட ஆவல் தான்..

ஆயினும் என்றாவது தான்

பூர்த்தியாகிறது....

நீ வருவதாகச் சொல்லும் நாளில்!

மறந்துபோன

பேனா கொடுப்பதல்ல

நான் வந்த காரணம்..

தினமும் இது போல்

ஏதோ ஒன்றைக் கூறிக்கொண்டு

நுழைகிறேன்..

ஆயினும் நீயறிவாய்,

என் வரவிற்கான காரணம்..!

உன் நினைவு




தூங்கும் முன் கழற்றிவைத்து

விழித்தபின் எடுத்துப் பூட்டி

மறக்கும் முன் பத்திரப்படுத்தி

என்றோ ஒரு நாள் மறந்தபின்

தேடித்தவித்து..

கிடைக்கும் போது கிடைக்கட்டும்

என்றிருக்க,

உன் நினைவு

ஒன்றும் நகையில்லையே!


அன்பின் கனம் தாளாது

பார்வை தவிர்க்கும்

அந்த நொடி கூட இனிமைதான்!

வெளிச்சம்



ஞாயிறாக விருப்பமில்லை


ஞாலத்திற்கே பொதுவாய்!


திங்களாகவும் வேண்டேன்


திகட்டும் அளவில்


எழுதி மாய்வர்..


அதில் தேய்ந்தே காணாமல்


போகிறது நிலவும்!


மின்சாரமற்ற ஓர்


இரவில்..


உன்னருகில்


ஓர் மெழுகுவர்த்தியாய்…!


கடந்து போனபின்னும்

திரும்பிப் பார்க்கவைக்கிறது...

குழந்தையின் சிரிப்பு!

Friday, 10 June 2011




மூடிய கதவின் பின்னே
முத்தச் சத்தம்..
குழந்தையாகத்தானிருக்கும்!

Wednesday, 8 June 2011

கவனம்


அத்தனை கவனமும் 

உன் மீதிருக்க, எனக்கு

கவனக் குறைவாம்?!

Tuesday, 7 June 2011

அன்பு..


இட்டாலும் எடுத்தாலும்
கொடுத்தாலும்
நிறைவதேயன்றி குறைவதில்லை..
எள்ளளவே ஆனாலும் 
கொடுத்துப்பார்..
உன் உள்ளமும் முழுதாய் 
நிறைந்து போகும்..

Monday, 6 June 2011

தண்மையும் வெம்மையும்
தனியொரு உருவாய்..
தனக்கென வட்டமிட்டு
கோலோச்சும் அரசாங்கமாய்..
சுற்றியுள்ளவரெல்லாம்
அன்பால் வசப்பட்டு,
பேச மறந்தவராய்..
அப்படியும் எல்லோருக்கும்
எல்லாமுமாய்
எப்படி முடிகிறது உன்னால்??!! 

நீ...



உறவும் இன்றி பகையும் இன்றி
பொதுவாய் தொடங்கிய உறவு ..
கிளைகள் விட்டு வளரும்
என்று நினைக்காத வளர்ச்சி!
என்று கருகுமோ என்ற
கவலையிலா அன்பு!
என் உயிரைக் கண்டு
இப்படி ஒர்  உன்னதம்
எனக்கும் வேண்டும் என
இறைஞ்சுவோர் பலர்..
எனக்கு கிடைத்தது வெறும்
 நட்பல்ல … வரம்!!
எத்தனை பிறவி எடுப்பினும்
பரவாயில்லை…
எனக்காக இந்த அன்பையும்
அனுப்பி வையும் இறைவா!

Sunday, 29 May 2011

தாய்மை




தாய்மை என்பது
தாய்க்கு மட்டுமே
சொந்தமல்ல..
எல்லா உயிரிடத்தும்
ஒளிந்துள்ள பொக்கிஷம்!

தவறு செய்யின், கண்டிப்பும்,
உணர்ந்த பின் மன்னிப்பும்..
இவற்றைப் புறந்தள்ளி
மழை போல் பொழியும் அன்பும்
தாய்மையன்றி வேறென்ன..?

ஒரு தாய் தன் சேயின்
நன்மைக்கென ,
விரும்பிச் செய்யும் செயலொத்ததே,
பிறர் துன்பம் தீர்க்கும்
எந்தச் செயலும்!
அடுத்தவர் கண்ணீர்
துடைக்க நீளும்
அத்தனை விரல்களிலும்
வழிகிறது தாய்மை!


Monday, 23 May 2011

தவிப்பு



தோழி தொலைத்த
ஒற்றைக்கால் கொலுசுக்காக
எத்தனை நடையடி..
தெருவெங்கும் தேடியபடி
தவிக்கிறாய்..
தெருவே உன்னுடன் தவிக்கிறது..

தம்பி தொலைத்த
புத்தகத்துக்காய் பள்ளி வரை
ஓடுகிறாய்..
தவித்தபடி பலர் இதயம்
உந்தன் பின்னால்..

தனியே திரியும்
கோழிக்குஞ்சுக்கும்,
மழையில் நனையும் அணிலுக்குமாய்
என்னைத் தவிர
எல்லோர் மீதும் நீள்கிறது
உன் தவிப்பு..

என்னைப்பார்..
உன்னிடம் உள்ளத்தை
தொலைத்துவிட்டு
நிம்மதியாய் இருக்கிறேன்!

புத்தி இல்லை..



தவிர்க்கிறாய் என்றுணர்ந்ததும்
தவித்துப் போனது மனது...
தள்ளியிருக்கும்படி
இடித்துரைத்தது புத்தி!

என் செய்வதென..
மனதைக் கல்லாக்கி..

தள்ளிவைத்தேன்
புத்தியை!

கண்ணாமூச்சி




தொடர்வதும்..
பிடிப்பதும்,
விடுவதுமாய்
என் விளையாட்டு தொடர்கிறது..
நீயாகத்தான் நழுவுகிறாய்
என்றறியாமலே...!
விட்டு விலகும் படி
விழையும் மனதை
விரட்டிப் பார்த்தேன்..
சும்மா
வேடிக்கைப் பார்ப்பதாகச்
சொல்லி.. .
விழுந்தே போனது உன்னிடம்..

காத்திருக்கிறேன்..






விழிகளுக்கென்ன

நீ வரும் வழியைப்
பார்த்தபடி அங்கும் இங்குமாய்...

செவியும் உதடுகளும்
அலைபேசியின் அழைப்பில்...
இதயத்திற்கு தான்
இருப்பே கொள்ளவில்லை...

எப்போது வருவாய் நீ?!

மூச்சு






மூச்சுக் காற்று போல்

உன் நினைவு..
ஓயாமல்!
என்ன ...
என்னால் மூச்சை ஒரு நிமிடமாவது
பிடித்து நிறுத்தி விட முடிகிறது....
ஆனால்...

Patience


I don’t ask THE questions..
Even if I ask,
There is no answer!
Better to be without questions..
Better not to worry about the answers too!!

There is a strange Silence..
Sometimes I feel I am sitting on it..
Sometimes it is sitting on me…

This silence between us,
 Is too cold..
And at times very warm too..
When it is warm, I forgo the cold ones,

As well when it is too cold, I think and refresh
With those warm ones!

Don’t know when those “Some other days”
Are going to come..
Waiting with the patience..

Patience…. Don’t wonder!
The love for you has taught me this.. to Wait!

உயிர்


ஏழு மலை தாண்டி..
ஏழு கடல் தாண்டி,
எங்கோ
என் உயிரை வைத்திருந்தால்
என் செய்வேன்?

எப்படி உளதோ
எனும் கவலையின்றி நானிருக்க..

என்னருகே உனை வைத்து,
உன்னிடமே என் உயிர் வைத்த
என்
இறைவனுக்கு நன்றி..