Monday, 3 October 2016

உந்தியில் பிறந்தவராயினும்
முந்திப்பிறந்திருந்தாலும்
எந்தையாயினும்
எம் தாயேயாயினும்
கைப்பிடித்தவராயினும்
மெய்யறிந்தவராயினும்
பிறப்பறுக்கும் பெரியோராயினும்
நமைப்பிரித்தெடுக்க எவருமில்லை-
நம்மைத்தவிர..

உனக்கு நான்
Nice to have
ஆபரணம் போலும் ..
உறுத்தும் நேரம்
கழற்றி விடுகிறாய்,
எனக்கு நீ
Must to have
ஸ்வாசமென்றறியாமலே..

Friday, 23 September 2016

Let go


விலகிவிடுமென்ற அச்சத்தில்
இறுகப் பற்றிக்கொண்டு
எனை இழந்தபடியே இருந்தேன்...
நழுவிய பின் தான்
நிம்மதி வந்தது..
எனக்கானதென்றால்
எனைவிட்டுப் போகாதென்று..
விட்டு விலகினும்,
தள்ளி நின்று ரசிக்கும்
பேரன்பு உள்ளவரையில்,
தைரியமாகச் சொல்லலாம்
Let go..

Tuesday, 24 May 2016

எங்கோ ஓர் இடத்தில்
குளிர் தவிர்க்க
கையுறையும் கம்பளியுமாய் நீ..
இங்கு வெம்மை தாங்காது
மெல்லிய ஆடையில் நான்..
உன் இரவு துவங்கும் நேரம்
என் அதிகாலை..
ஆயினும் என்ன
நாமிருவரும் பார்த்தது
அதே நிலவைத்தான்..😍