Thursday, 21 November 2013

பார்க்காமல் கண்கள்
பூத்துப் போயின...
பேசாது இதயம்
கனத்துப்போனது...
உன்னிடமிருந்து ஒரு அழைப்புமில்லாது
அலைபேசியும் செத்துப் போனது..
என்னை நினைப்பாயோதெரியவில்லை
நினைப்பதாகவும்
தெரிவதில்லை ....
இருந்தும் இன்னமும்..

அலைபேசி மானஸ்தன்...

Wednesday, 29 May 2013


த‌னியே புன்னகைக்கும் வேளையில்
பொத்தி வைத்த பதிவுகளைப் 
படித்து பார்த்தேன்!
இலக்கணங்களை மீறித்தான் கிடந்தது

உன் மீதான அன்பின் 
எழுத்து வடிவங்கள்!
என்னைப்போலவே..