Tuesday, 22 May 2012

மறப்பதும் மன்னிப்பதும்
 அத்தனை எளிதாய் இருந்தால்...
 உன்னை மறந்து,
அதற்காய் எனை மன்னித்தும் விடலாம்...

Wednesday, 16 May 2012

இந்த நிமிடம் எனை
நினைத்திருப்பாயோ?
இந்த நிமிடம் எனை
அழைப்பாயோ?
இந்த நொடியிலாவது 
குறுஞ்செய்தி அனுப்புவாயோ  
என ஒவ்வொரு நிமிடமும்
உன்னை நினைத்தபடியே நான்..

Tuesday, 15 May 2012

புறக்கணிப்பை விட
வலி தரும் வன்முறை
வேறொன்று உண்டா?

Sunday, 13 May 2012

மூளைக்கு தெரிவதெல்லாம் 
மனதுக்கு புரிவதில்லை..
சமயத்தில் புரிந்து கொண்டாலும்,
மனம் ஏற்பதில்லை..
ஏற்கும் வண்ணம் எல்லாம் நடந்தால்
இறைவன் இருப்பதை 
மறந்து போவோமோ?

யாசித்துப் பெறும் பொருள்
எத்தகு உயர்வானதாயினும்
யாசிப்பின் வலி
பெறுபவருக்குத்தான் தெரியும்..
அன்பு உட்பட..