Monday, 27 October 2014

உன் சிறு  செயல்  
என் அத்தனை  உணர்வுகளையும்
கவிதைகளையும்
விஞ்சிவிடுகிறது ,
அன்பை  காட்டுவதில்..

சாதாரணமாய்  அவ்வப்போது  வந்து போகும்  
உன் நினைவு, 
சில நாட்களை துவக்கியும் 
பெரும்பாலான நாட்களை முடித்தும்  வைக்கும்..
ஆயினும் இன்று போல்  ஒரு  சில நாட்களில் 
நான் எழுமுன் துவங்கி  
வேறெதுவும்  நினையாது,
செயல்களிலும் மனம் செல்லாது, 
உன்னிடம் மட்டுமே 
நின்று போகும்..
விடியற்காலை  கனவில் துவங்கி  
கவிதையாய்  இரவு வரை...
அத்தகு நாட்கள் தான் எத்தனை  இனிமை...

உனதன்பு வைரத்தைவிட உயர்ந்தது,
அபூர்வமாய் தான் பார்க்க முடியும் ...
உன் மீதான எனதன்பு
வைரம் போன்றது..
வெளிக்காட்டும்  போது
சிலநேரம் ரசனையாய் அழகாய்..
சிலநேரம் கண்கள் கூசி
தவிர்க்க வேறு பக்கம் 
திரும்பவும் நேரலாம்..
சங்கடம் தவிர்க்க 
விழுங்கிவிடலாமென்றால்
உள்ளே அறுத்து விடுகிறது..
செய்வதறியாது நான்..

தவறு

நீ எது செய்தாலும் சரிதானெனும் நான்,
எங்கு தவறுகிறேன்?
தவறு யாதென புரியாத வரையில்
தண்டனை மட்டும் திருத்தி விடுமா?
அன்பின் உச்சமாய் எனை நினைத்திருக்க,
தவறுகளின் எச்சமாய் உனக்குத் தெரிவதும்
தண்டனையாய் தவிர்ப்பதும்
அன்பினால் ஆவது தானா?
ஒவ்வொரு முறையும் பதிலளிக்கப்படாத
என் விசாரிப்புகள், 
எனை ஏளனம் செய்வதை அறிவாயா?
முன்பெல்லாம் எனைக் காணவென 
நீ வந்த பொழுதுகள்
நினைவுகளில் மட்டுமாகிப் போனது..
எழுதி முடிக்க இயலாத வரிகள் 
மனமெங்கும்...

Saturday, 26 April 2014

Miss you

ஊரின்  இந்தப் பக்கம் நான்  
அந்தப் பக்கம் நீ..
நாட்கணக்கில்  பாராது 
இருப்போம்..
ஆயினும் நான்கே நாட்களானாலும் நீ  
வேறிடம் சென்றால் 
ஒரு வெற்றிடம்  மனதுள்..