Sunday, 29 May 2011

தாய்மை




தாய்மை என்பது
தாய்க்கு மட்டுமே
சொந்தமல்ல..
எல்லா உயிரிடத்தும்
ஒளிந்துள்ள பொக்கிஷம்!

தவறு செய்யின், கண்டிப்பும்,
உணர்ந்த பின் மன்னிப்பும்..
இவற்றைப் புறந்தள்ளி
மழை போல் பொழியும் அன்பும்
தாய்மையன்றி வேறென்ன..?

ஒரு தாய் தன் சேயின்
நன்மைக்கென ,
விரும்பிச் செய்யும் செயலொத்ததே,
பிறர் துன்பம் தீர்க்கும்
எந்தச் செயலும்!
அடுத்தவர் கண்ணீர்
துடைக்க நீளும்
அத்தனை விரல்களிலும்
வழிகிறது தாய்மை!


Monday, 23 May 2011

தவிப்பு



தோழி தொலைத்த
ஒற்றைக்கால் கொலுசுக்காக
எத்தனை நடையடி..
தெருவெங்கும் தேடியபடி
தவிக்கிறாய்..
தெருவே உன்னுடன் தவிக்கிறது..

தம்பி தொலைத்த
புத்தகத்துக்காய் பள்ளி வரை
ஓடுகிறாய்..
தவித்தபடி பலர் இதயம்
உந்தன் பின்னால்..

தனியே திரியும்
கோழிக்குஞ்சுக்கும்,
மழையில் நனையும் அணிலுக்குமாய்
என்னைத் தவிர
எல்லோர் மீதும் நீள்கிறது
உன் தவிப்பு..

என்னைப்பார்..
உன்னிடம் உள்ளத்தை
தொலைத்துவிட்டு
நிம்மதியாய் இருக்கிறேன்!

புத்தி இல்லை..



தவிர்க்கிறாய் என்றுணர்ந்ததும்
தவித்துப் போனது மனது...
தள்ளியிருக்கும்படி
இடித்துரைத்தது புத்தி!

என் செய்வதென..
மனதைக் கல்லாக்கி..

தள்ளிவைத்தேன்
புத்தியை!

கண்ணாமூச்சி




தொடர்வதும்..
பிடிப்பதும்,
விடுவதுமாய்
என் விளையாட்டு தொடர்கிறது..
நீயாகத்தான் நழுவுகிறாய்
என்றறியாமலே...!
விட்டு விலகும் படி
விழையும் மனதை
விரட்டிப் பார்த்தேன்..
சும்மா
வேடிக்கைப் பார்ப்பதாகச்
சொல்லி.. .
விழுந்தே போனது உன்னிடம்..

காத்திருக்கிறேன்..






விழிகளுக்கென்ன

நீ வரும் வழியைப்
பார்த்தபடி அங்கும் இங்குமாய்...

செவியும் உதடுகளும்
அலைபேசியின் அழைப்பில்...
இதயத்திற்கு தான்
இருப்பே கொள்ளவில்லை...

எப்போது வருவாய் நீ?!

மூச்சு






மூச்சுக் காற்று போல்

உன் நினைவு..
ஓயாமல்!
என்ன ...
என்னால் மூச்சை ஒரு நிமிடமாவது
பிடித்து நிறுத்தி விட முடிகிறது....
ஆனால்...

Patience


I don’t ask THE questions..
Even if I ask,
There is no answer!
Better to be without questions..
Better not to worry about the answers too!!

There is a strange Silence..
Sometimes I feel I am sitting on it..
Sometimes it is sitting on me…

This silence between us,
 Is too cold..
And at times very warm too..
When it is warm, I forgo the cold ones,

As well when it is too cold, I think and refresh
With those warm ones!

Don’t know when those “Some other days”
Are going to come..
Waiting with the patience..

Patience…. Don’t wonder!
The love for you has taught me this.. to Wait!

உயிர்


ஏழு மலை தாண்டி..
ஏழு கடல் தாண்டி,
எங்கோ
என் உயிரை வைத்திருந்தால்
என் செய்வேன்?

எப்படி உளதோ
எனும் கவலையின்றி நானிருக்க..

என்னருகே உனை வைத்து,
உன்னிடமே என் உயிர் வைத்த
என்
இறைவனுக்கு நன்றி..