Monday, 10 September 2012

என்னிடம்
இன்னும் ஒரு கேள்வி
மீதம் இருக்கிறது..
பதில் சொல்லப்  பிடிக்காத
என் கேள்விகளை என்ன செய்கிறாய்?


Sunday, 2 September 2012

உன் நட்பு

திருமணத்திற்கு முன்பான காலத்தில் 
நான் அறிந்திருக்கவேயில்லை,
அதைத் தாண்டிய பந்தம் ஒன்று,
எனை வெல்லும் என..
அறிந்திருப்பின் மறுத்திருப்பேன்...
...........................
உன்னையல்ல..
அன்பின் வெளிப்பாடாய் 
எதை எதையோ கிறுக்கி, 
அதையும் விடாது உனக்கனுப்பி 
பதிலுக்குக் காத்திருப்பது 
பாராட்டுக்கல்ல .....
எனதன்பை பகிரத்தான்..

நினைவுகள்

சிறிதும் பெரிதுமாய்
ஆயிரம் நினைவுகள் ...
அடுக்கி  வைக்க ஓர்
ஆயுள் போதாது..
அத்தனையும் உன்னுடனானவை
இந்த எண்ணம் ஒன்று போதும்
என் ஆயுள் நீளும்
ஆயிரம் காலம்...

Saturday, 1 September 2012

ஒவ்வொரு அணுவிலும்
உன்பெயர் இருக்க,
வேறு யாரிடம்
என் மனம் இருக்கும்?

வேலி

உன்னைச் சுற்றிச் சுற்றி
வருவதென்னவோ
நான் தான்...
என்னைச் சுற்றிலும்
உன் நினைவு வேலி...
எப்படி?