Sunday, 2 September 2012

உன் நட்பு

திருமணத்திற்கு முன்பான காலத்தில் 
நான் அறிந்திருக்கவேயில்லை,
அதைத் தாண்டிய பந்தம் ஒன்று,
எனை வெல்லும் என..
அறிந்திருப்பின் மறுத்திருப்பேன்...
...........................
உன்னையல்ல..
அன்பின் வெளிப்பாடாய் 
எதை எதையோ கிறுக்கி, 
அதையும் விடாது உனக்கனுப்பி 
பதிலுக்குக் காத்திருப்பது 
பாராட்டுக்கல்ல .....
எனதன்பை பகிரத்தான்..

நினைவுகள்

சிறிதும் பெரிதுமாய்
ஆயிரம் நினைவுகள் ...
அடுக்கி  வைக்க ஓர்
ஆயுள் போதாது..
அத்தனையும் உன்னுடனானவை
இந்த எண்ணம் ஒன்று போதும்
என் ஆயுள் நீளும்
ஆயிரம் காலம்...