வார்த்தைகள் விற்றுக்
கொஞ்சம்
மௌனத்தை வாங்கச் சென்றேன்..
வார்த்தைகள் கொள்வாரில்லை,
மௌனமும் தருவாரில்லை..
கோவத்தில் கொட்டுவதற்கும்,
நேசத்தில் அள்ளுவதற்கும்,
தேவையென நினைத்த வார்த்தை,
எல்லோரிடமும் நிரம்பி
வீணென வழிந்து..
வாயடைத்துப்போனேன்..
மௌனம் தானாய் வசப்பட்டது!