Sunday, 18 November 2012


சாந்தனு ராஜாவின் நிலையானது எனக்கும்..
உன் செய்கைக்கான காரணம்  
புரிவதில்லை..
கேட்கவும் முடியாது..
கேட்டதும் மொத்தமாய் 
சென்றுவிட்டால்.?
மன்மோஹன்சிங் ஆகிப்போனேன்.. 

Saturday, 17 November 2012


மூச்சு நின்றால்தான் 
உயிர் பிரியுமா? 
என்னுடனான உன் பேச்சு  
நின்றாலும்...

Thursday, 8 November 2012


இருப்பதும் இல்லாதிருப்பதும் 
ஒரே நிலையானபோது
உணர்ந்தேன்... 
என்னைச் சுற்றிய 
உன் நினைவு வலையை...
வலையகற்றினால் 
என் நிலை தளர்ந்து போம்..
அதற்கு...
வலைக்குள்ளே வசிக்கலாம்
நிலை மறந்து!