உன்னைப் பார்க்காத வரையில் பாதகமில்லை,
பிரிவுத் துயர் தான்..
பேசாதிருக்கயிலும் கஷ்டமில்லை,
அருகிலில்லாத ஏக்கம் மட்டும் தான்..
ஆனால்,
பார்த்துவிட்டால் போச்சு..
அதற்கு மேல்
ஓரிரு வார்த்தை பேசிவிட்டலோ,
உன்னிடமே
தொலைந்தது தான் போய்விடுகிறேன். .
மீட்டு வருவதாகச் சொல்லி
மீண்டும் மீண்டும் உன்னிடமே..
இத்தனை மாயம் செய்யும்
அந்த வசியச் சிரிப்பை
எப்படி காணாதிருப்பது?
No comments:
Post a Comment