Friday, 12 June 2015

எத்தனை முறை சொன்னாலும் 
அலுக்காத எனக்கும்
ஒருமுறை கேட்டதுமே
திகட்டும் உனக்குமாய்
ஒரு பந்தம் ..
எப்போதாவது நிகழும் 
வாழ்வின் அதிசயங்களில்
முதன்மையாகிப்போனது..
நிகழ்ந்த நேரம் கூட
இன்னமும் மனதில் ஈரமாய்..
வாழ்வின் சிறப்பெல்லாம்
எதிர்பாரா நேரத்தில் நிகழும்
தருணங்களில் தான்..
அப்படி உயிர்த்த நிகழ்வு நீ!

No comments:

Post a Comment